மாசம் கட்ட வேண்டிய EMI bounce ஆகறப்ப தன்னோடு லிஸ்ட் ல இருக்கிற எல்லா நம்பரையும் எடுத்து கால் பண்ணி பத்தாயிரம் இருக்குமா அஞ்சாயிரம் இருக்குமானு மனசு வலிச்சு கேட்டு இருக்கீங்களா சார்?
ஸ்கூல்ல எல்லோரும் ஃபீஸ் கட்டியாச்சு. நான் மட்டும் தான் கட்டலைனு கவலையோட சொல்ற மகனை மனசு வலிச்சு பார்த்து இருக்கீங்களா சார்?
ஆஸ்பத்திரியில நெருக்கமானவங்களை அட்மிட் பண்ணிட்டு, சீக்கிரம் ஆப்பரேஷன் பண்ணனும் ரெண்டு நாள்ல பணம் ஏற்பாடு பண்ணுங்க னு டாக்டர் சொன்னப்பதுக்கு அப்புறம் எப்படி புரட்ட போறோம்னு அழுதுட்டே மனசு வலிச்சு வெளிய வந்துருக்கீங்களா சார்?
காலையிலிருந்து சாப்பிட காசில்லாம வெறும் ரெண்டு டீ குடிச்சிட்டு வயித்தை பெசஞ்சிட்டு பீச் பக்கம் அந்த