*தினம் ஒரு திருப்புகழ்*
பதிவில் இன்று
ஸ்ரீ அருணகிரிநாதர்
அருளிய பாடல் 1165 - *பொதுப்பாடல்கள் திருப்புகழ்*
நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி
நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி நமசிவய மாமை யாகி ...... எழுதான
அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் அறிவிலறி வான பூர ...... ணமுமாகும்
அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி
மருவுமவ தான போதம் ...... அருள்வாயே
குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி
குறையகல வேலை மீது ...... தனியூருங்
குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி
அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி
அரியமண மேசெய் தேக ......