CHENNAI to Rameshwaram _ INDIA சென்னை டூ ராமேஸ்வரம் இனி 9 மணி நேரத்தில் பயணிக்கலாம்...அதுவும் புதிய பாம்பன் பாலம் வழியாக

Comments · 4 Views

ராமேஸ்வரம், நாட்டில் உள்ள மிக முக்கியமான ஆன்மிக தலமாகும். காசிக்கு அடுத்த படியாக அதிகமானவர்கள் வந்து வழிபட

சென்னையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு புதிய வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் வரவுள்ளது. இது தமிழ்நாட்டில் பயணத்தை எளிதாக்கும். சுற்றுலாவுக்கும் இது ரொம்ப உதவியாக இருக்கும். இந்த ரயில் 665 கி.மீ தூரத்தை 9 மணி நேரத்துக்குள் கடக்கும். இது சென்னை மற்றும் ராமேஸ்வரம் இடையேயான பயணத்தை வேகப்படுத்தும். இந்த ரயில் புதிய பாம்பன் பாலம் வழியாக செல்லும். சென்னை-ராமேஸ்வரம் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு நல்ல செய்தி. இந்த ரயில் வந்ததும் பயணம் ரொம்ப சுலபமாக இருக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களுக்கு போக இது உதவியாக இருக்கும். முக்கியமாக சுற்றுலாவுக்கு இது ரொம்ப நல்லது. ரயில் நிறுத்தங்கள் : தாம்பரம், செங்கல்பட்டு விழுப்புரம் விருத்தாச்சலம் திருச்சி மானாமதுரை மண்டபம் ரயிலின் வேகம் : இந்த ரயில் மணிக்கு 160 கி.மீ வேகத்தில் பயணம் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரயில் வசதிகள் : இந்த ரயிலில் மொத்தம் எட்டு கோச் இருக்கும். அவற்றில் ஒரு Executive AC கோச், ஏழு AC Chair Car கோச் இருக்கும். AC Chair Car டிக்கெட் விலை சுமார் ரூ. 1,400 இருக்கும். Executive AC டிக்கெட் விலை சுமார் ரூ. 2,400 இருக்கும் என சொல்லப்படுகிறது. இது படுக்கை வசதிகள் கொண்ட ஸ்லீப்பர் ரயில்களாகவும் இயக்க் திட்டமிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ரயில் நேரம் : சென்னையில் எக்மோரில் இருந்து காலை 5:50 மணிக்கு கிளம்பி ராமேஸ்வரத்துக்கு மதியம் 2:30 மணிக்கு போகும். ராமேஸ்வரத்தில் இருந்து மதியம் 3:00 மணிக்கு கிளம்பி சென்னைக்கு இரவு 11:30 மணிக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில் சேவை துவங்கப்பட்டால் சென்னை-ராமேஸ்வரம் வழித்தடத்தில் இயக்கப்படும் அதிவேக ரயிலாக இந்த வந்தே பாரத் ரயில் சேவை இருக்கும்

Comments