Upptäck inläggUtforska fängslande innehåll och olika perspektiv på vår Upptäck-sida. Upptäck nya idéer och delta i meningsfulla samtal
ஒருநாள் பானுமதியிடம் கேட்டேன். ‘பேசும்போது அடிக்கடி பிராப்தம், விதி என்றெல்லாம் சொல்கிறீர்கள். உங்களுக்குக் கைரேகை, ஜோதிடம் இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதா?” பதிலேதும் சொல்லாமல் என்னை ஓர் அறைக்குள் அழைத்துச் சென்றார். அங்கிருந்த பீரோவைத் திறந்து “பாருங்கள்” என்றார்.
அந்த பீரோ முழுவதும் அவர் சேகரித்து வைத்திருந்த ஜோதிடம் தொடர்பான கிரந்தங்கள், புத்தகங்கள்! கைரேகை ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட நூல்களையும் காண்பித்தார். பழஞ்சுவடிகள் சிலவும் அங்கே இருந்தன.
“ஜாதகம்கறது ஏதோ பொய் புனைசுருட்டு கிடையாது. அது கணிதம். சின்ன வயசிலிருந்தே எனக்கு இதிலெல்லாம் ஈடுபாடு உண்டு. படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் வீட்டிலிருக்கும் நாடி கிரந்தங்களில் மூ