*கர்மவினை போக்கும்* *தட்சிணாமூர்த்தி* *வழிபாடு பற்றிய*
*சிறப்பு பதிவு*!
மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது.
பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.
அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே.
நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும்
முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை.
இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.
முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி).
இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர்.