இல்லாததை இருப்பது போலவும், நிலையற்றதை நிலையானது போலவும் காட்டும் பொய்த் தோற்றத்தை மாயை & மாயம் என்கிறோம்.. ஃ
சமஸ்கிரததத்தில் அநிர்வசனீயம் என்பார்கள்.. வசனத்தால் & வார்த்தையால் வர்ணிக்க முடியாதவை என்று பொருள்.. நம்மவர்கள் அனைத்தும் பார்த்து ரசித்த, ஏமாந்த கானல்நீர் மட்டுமே இன்று வரை மாயை என்றதும் முதலில் வரும் நினைவு.. இந்த மாயையால் ஏதாவது நன்மை பயக்குமா? எனில் ஒரு சதவீதம் கூட இல்லை என்பதே உண்மைங்க..
கானல்நீரால் எப்படி தாகம் தீர்க்க முடியாதோ.. அதுபோலத்தாங்க மாயையால் எந்த பலனும் வாழ்க்கைக்கு கிடைக்காது..
இந்த உலகம் நிலையானதல்ல, இது மாயை என அத்வைதம் சொல்கிறது..